நாட்டில் இருந்து வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதன் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதாக கூறப்படுகிறது. வைத்திய சபையின் ஊடாக வெளிநாடு செல்வதற்கான அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன்போது 2,200 அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனூடாக வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றதாக தெரிவிக்க முடியாது. விசேட வைத்தியராக ஒருவர் பதிவு செய்வதற்கு முன்னர் வெளிநாட்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவர்களில் அதிகமானோர் கற்றல் செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor