நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 37, 760 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 20 வீத வீழ்ச்சியைக் காட்டுகின்றது.

கடந்த ஜூலை மாதம் 47,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளில் ஐக்கிய இராச்சியம், இந்தியா, ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகள்

அதே போன்று ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு அடுத்ததாக கட்டார் விமான ​சேவை மற்றும் எமிரேட்ஸ் விமான சேவை என்பனவே இலங்கைக்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வரும் விமான சேவைகளாக கணிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த எட்டு மாதங்களில் அண்ணளவாக ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதிலும் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கைக்கான சுற்றுப் பயணம் தொடர்பில் பல்வேறு நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது

Recommended For You

About the Author: webeditor