2023ம் ஆண்டு நிறைவடைந்து, தற்போது 2024ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த ஆண்டு துவங்குவதற்கு முன்பிருந்தே முக்கிய கிரகங்களின் நிலைகளில் பலவிதமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஜோதிட ரீதியாக மட்டுமின்றி வானில் ரீதியாகவும் சூரிய மண்டலத்தில் பலவிதமான மாற்றங்கள் நிகழ உள்ளன. 2024ம் ஆண்டில் முதல் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் எப்போது வருகின்றன, எந்த தேதியில் எந்த நேரத்தில் கிரகணம் நிகழ போகிறது, இவற்றில் எந்தெந்த கிரகங்கள் இந்தியாவில் தெரியும் என்பது குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
2024ம் ஆண்டில் மொத்தமாக 5 கிரகணங்கள் நிகழ போகின்றன. மூன்று சந்திர கிரகணங்களும், இரண்டு சூரிய கிரகணங்களும் இந்த ஆண்டில் ஏற்பட உள்ளன. 2024ம் ஆண்டில் முதலில் ஏற்படும் கிரகணம் சந்திர கிரகணம் தான். மார்ச் 25ம் தேதி முதல் சந்திர கிரகணமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 08ம் தேதி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமும் ஏற்பட உள்ளன.