இராணுவத்தில் நடக்கும் வன்கொடுமை தொடர்பான 2021 நிதியாண்டு அறிக்கையை அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டது. வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் ஆகியவை தொடர்ந்து மற்றும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன என்று இந்த முடிவுகள் கூறுகின்றன.
பணியில் ஈடுபடும் பெண்களில் 8 சதவீதத்திற்கும் அதிகமானவர்களும் , பணியில் ஈடுபடும் ஆண்களில் 1.5 சதவீதத்தினரும், கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முந்தைய ஆண்டில் தேவையற்ற தொடர்பை அனுபவித்ததாகக் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 நிதியாண்டில் பெறப்பட்ட 7,816 அறிக்கைகளில் இருந்து 1,050 முறைப்பாடுகள் அதிகரித்து, பென்டகன் மொத்தம் 8,866 வன்கொடுமை முறைப்பாடுகளை பெற்றுள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது.
அமெரிக்க இராணுவத்தில், 2020 நிதியாண்டில் இருந்து வன்கொடுமை அறிக்கைகள் 25.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கடற்படை 9.2 வீத அதிகரிப்பைக் கண்டதுடன், மரைன் கார்ப்ஸ் மற்றும் விமானப்படை முறையே 1.7 வீதம் மற்றும் 2.4 வீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது