சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யாஷான்பு பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பாடசாலையின் விடுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த தகவலை சீனாவின் உத்தியோகபூர்வ ஊடகமான சின்சூவா நியூஸ் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தீ விபத்தில் எத்தனை மாணவர்கள் இறந்தனர் என்ற தகவலை அந்த ஊடகம் வெளியிடவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து அறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் மக்கள் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
13 குடும்பங்களைச் சேர்ந்த 13 சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்