நிலவில் தரையிறங்கிய 6 ஆவது நாடு!

ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 6 ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் 100 மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் லேண்டரை தரையிறங்க முயற்சித்தது.

தற்போது லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் தனது செயல்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Recommended For You

About the Author: admin