நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் சில உணவுகளை உட்கொண்டால் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும் நிலையில், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலையில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரையில் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். தானிய உணவுகளை காலை உணவாக எடுக்கும் முன்பு அதன் லேபிளில் சர்க்கரையின் அளவு அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு பதிலாக ஓட்ஸை இரவில் ஊற வைத்து காலையில் உணவாக தயாரித்துக் கொள்ளலாம்
ஆரோக்கியமான உணவு என்று நாம் நினைக்கும் பழச்சாறு நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெறும்வயிற்றில் பழச்சாறு அருந்தினால், ரத்த சர்க்கரை அளவு உடனே அதிகரிக்கும். இதற்கு பதிலாக முழு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.
தயிர் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும். தயிரில் உள்ள இனிப்பு சுவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். தேவையெனில் இனிப்பு இல்லாத தயிரை தெரிவு செய்து சாப்பிடலாம்.
பான் கேக் நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மாவு, மேபிள் சிரப் மற்றும் வெண்ணெய் இவைகள் சாப்பிட நன்றாக இருந்தாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஸ்மூத்திகளும் அடங்கும். உறைந்த தயிர், பழங்கள் மற்றும் சர்க்கரை பாகுகள் போன்றவற்றால் தயாரிக்கப்படும் இவை, உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
ஸ்மூத்திக்கு பதிலாக, வெண்ணெய், ஆப்பிள், முட்டைக்கோஸ் மற்றும் கீரையுடன் பச்சை சாறு முயற்சி செய்து காலையில் சாப்பிடலாம்.