பொதுவாகவே தற்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் சவாலான விடயமாகவே மாறி வருகின்றது.
அந்தவகையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் டயட் முறைகள் என பல்வேறு விடயங்களை பின்பற்றினாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது, உடலுக்கு முழுமையான சக்தியை தருகிறது.
இது எளிய ஒரு வழி என்றாலும் நல்வாழ்வை ஊக்குவிக்கிறது. இந்த அணுகுமுறையை செய்வதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறை கொண்டு வரலாம். நமது தினசரி வாழ்க்கையில், சுய பாதுகாப்பிற்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருக்கும்.
இருப்பினும், தினமும் வெறும் வயிற்றில் காலையில் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி
காலையில் சாப்பிடும் முன்பு வேகமான நடைப்பயிற்சியில் ஈடுபடுவது, உங்கள் வளர்சிதை மாற்றம் முதல் அன்றைய நாள் முழுவதும் நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
இந்த வளர்சிதை மாற்றம் அதிகரிப்பு உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நடப்பது, உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க உதவுகிறது.
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் கிளைக்கோஜன் அளவைக் குறைக்கிறது, காலையில் நடைபயிற்சியின் போது உடலின் ஆற்றலுக்காக கொழுப்புகளை உடல் பயன்படுத்தி கொள்கிறது.
இந்த வழக்கம் காலப்போக்கில் அதிக எடையை குறைக்க உதவும். மன அழுத்தம் காலை நடைப்பயிற்சி செய்யும் போது வாகனங்கள் அதிகமாக இருக்காது.
இந்த சமயத்தில் இயற்கை மற்றும் சுத்தமான காற்றை சுவாசிப்பது அமைதியை அதிகப்படுத்தி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. காலையில் நடைப்பயிற்சி செய்வது இயற்கையான காலை சூழலுடன் இணைந்து, மன அழுத்த நிவாரணிகளான எண்டோர்பின்களை வெளியிடுகிறது.
இந்த பயற்சிகள் எந்தவித செலவும் இல்லமால் மன அழுத்தத்தை குறைக்க உதவும். இரத்த சர்க்கரை மற்றும் இதய ஆரோக்கியம் காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.