மலையக தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் இன்று(16) வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நானுஓயாவிலிருந்து நேற்று (15)கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட தொடருந்து கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் தடம் புரண்டதன் காரணமாக மூன்று தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

பாதிப்பிற்குள்ளான பயணிகள்
இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வருகை தந்த பயணிகள் தலவாக்கலை தொடருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் ஊடாக அனுப்புவதற்கும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் நானுஓயாவிலிருந்து அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படிருந்தன.

இதனால் தைப்பொங்கல் தினத்திற்காகவும் விடுமுறை கழிப்பதற்காகவும் மலையக பகுதிகளுக்கு வருகை தந்திருந்த தொடருந்து பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடருந்து திணைக்கள ஊழியர்கள் இரவு பகலாக தொடருந்து பாதையினை சீர் செய்ததையடுத்து இன்று(16)அதிகாலை நான்கு மணி முதல் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor