வீட்டில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி?

வீட்டில் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் தரும் செடிகளில் ஒன்றாக இருக்கும் மணி பிளாண்ட் எவ்வாறு வளர்ப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மணி பிளாண்ட்
அதிர்ஷ்டம் தரும் செடி என்ற லிஸ்டில் மணி பிளாண்ட் உள்ள நிலையில், இதனை வீட்டில் வளர்த்து வந்தால் பணவரவு அதிகரிப்பதுடன், அதிர்ஷ்டமும் கை கூடி வரும் என்பது நம்பிக்கை.

இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் மிகவும் பொதுவான தாவரங்களில் மணி பிளாண்ட் ஒன்றாகும், ஏனெனில் இது நல்ல அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் சின்னஞ்சிறு தண்டுகள் வைத்த இந்த செடியினை எவ்வாறு பராமரிப்பது என்பது பலருக்கும் தெரியவதில்லை. இப்பதிவில் அதுகுறித்து தெரிந்து கொள்ளலாம்

மணி பிளான்டின் வளர்ச்சிக்கு சில டிப்ஸ்
மணி பிளாண்ட் வைக்கும் தொட்டியின் அளவு பெரிதாக இருக்க வேண்டுமாம். சிறிய தொட்டியாக இருந்தால் வளர்ச்சி பாதிக்கும்.

காற்றில் உள்ள ஈரப்பதத்தினை உறிஞ்சி உயிர் வாழும் மணி பிளாண்டிற்கு வாரம் ஒருமுறை மட்டும் தண்ணீர் தெலுத்தினால் போதும்.

தரமான மண் இல்லையென்றாலும் செடி வளர்வது சாத்தியமில்லை. ஆதலால் மணல் கலவை சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். வெர்மிகுலைட்டுடன் கோகோபீட்டை கலப்பது ஒரு நல்ல வழி. இது மண்ணின் தன்மையை பாதுகாக்கும்.

மணி பிளாண்ட் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் இயற்கையான உரம் லேசான அளவில் சேர்த்து வரலாம். மண்ணில் போதுமான சத்து இல்லை என்றால் இந்த செடி செழிப்பாக வளராது மற்றும் சோர்ந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.

Recommended For You

About the Author: webeditor