ஜனாதிபதி செயலகம் செலுத்த வேண்டிய 22 மில்லியன் ரூபா மின் கட்டணத்தை செலுத்தும் நடவடிக்கை முற்றாக கைவிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
செயலகத்தில் உள்ள மின்தூக்கிகள் மற்றும் குளிரூட்டிகளின் செயற்பாட்டிற்காக இந்த பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும், எனினும் பணத்தை செலுத்தத் தவறியுள்ளதுடன் அதற்கு பதிலாக ஜனாதிபதி செயலகம்,மின்சாரத்தை வெளி நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மின்சார சபைக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் போது ஜனாதிபதி செயலகம் மின் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பது நியாயமற்ற வெட்கக்கேடான செயல் எனவும் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்