மாரடைப்பு வரப்போவதை ஒரு மாதத்திற்கு முன்பே உணரமுடியுமா?

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது. மாரடைப்பு தற்போது மிகவும் சாதரணமாகிவிட்டது.

அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான புரிதல்களோ அல்லது, உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்தோ நம்மில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை. உலகளவில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முன்பெல்லாம் மாரடைப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களை தான் அதிகம் பாதித்தது. ஆனால் இப்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் மாரடைப்பு வருகிறது.

அதற்குக் காரணம் இதய தசையின் குறிப்பிட்ட பகுதியில் போதுமானளவு ரத்தம் கிடைக்காததால் தான். பொதுவாகவே மாரடைப்பு திடீரென ஏற்பட்டு தீவிரமான நிலைக்கு தள்ளும் என்று நம்மில் பெரும்பாலானோர் நம்புகின்றனர்.

ஆனால் அது அப்படி இல்லை. மாரடைப்பின் அறிகுறிகள் எப்படியெனில் மாரடைப்பு வருவதற்கு முன் சில மணி நேரங்கள், நாட்கள் வாரங்கள், ஏன் மாதங்களில் கூட நமக்கு அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

மாரடைப்பு அறிகுறிகள்
வைத்தியர்களின் கருத்துப்படி மாரடைப்பு ஏற்படப்போகின்றது என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே சில சகஜமற்ற உணர்வுகள் ஏற்பட ஆரம்பிக்கும். அந்தவகையில் அதிகப்படியான சோர்வு, தூக்கமின்மை, மூச்சு திணறல், பலவீனம், அதிக வியர்வை, தலைசுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவையே முக்கிய அறிகுறிகள் ஆகும்.

எனவே, இதுபோன்ற அறிகுறிகளை நீங்களும் அனுபவித்தால் உடனே மருத்துவரை சந்தித்து அதற்குரிய பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. மாரடைப்பில் இருந்து தப்பிக்க இது உங்களுக்கு உதவும்.

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும், உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்க வேண்டும்.

மேலும் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும், சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும், புகை மற்றும் மது பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இதனை நீங்கள் முறையாக கடைப்பிடித்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறைவடைகின்றது.

மேலும் மாரடைப்பு அறிகுறிகள் எப்போதும் இருப்பதை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான அறிகுறிகளை ஒரு போதும் அலட்சியப்படுத்தக் கூடாது.

Recommended For You

About the Author: webeditor