தைப் பொங்கல் கொண்டாட உகந்த நேரம்!

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.

தமிழர் திருநாளாக தமிழர்களால் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் என்று தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

உழைக்கும் மக்கள் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகை தான் பொங்கல் திருநாள்.

பொங்கல் நெருங்கி வரும் இவ்வேளையில் தைப் பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும், பொங்கல் வைப்பதன் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி இந்த பதிவில் காண்போம்.

பொங்கல் பண்டிகையானது மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தைப்பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று கொண்டாடப்படும்.

முதல் நாளான தைப்பொங்கலன்று அதிகாலையில் சூரிய வீடை அமைத்து பொங்கலை வரவேற்பார்கள். பின்னர் அடுப்பில் புது பானை வைத்து பொங்கல் செய்து குழவியிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கலை கொண்டாடுவார்கள்.

முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைப்பது நல்லது. ஜனவரி-15 ஆன பொங்கல் திருநாளன்று காலை 06.30 மணி முதல் முதல் 07.30 மணி வரை பொங்கல் வைப்பதற்கான உகந்த நேரமாகும்.

அதை விட்டால் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை வைத்து வழிபடலாம். அன்றைய நாளில் காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை ராகு காலம் என்பதால் அந்த நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்கவும்.

Recommended For You

About the Author: webeditor