நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக இன்று வெளியானது.
அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டை தனுஷ் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர்.
அதாவது புதுச்சேரி மாநில நடிகர் தனுஷ் தலைமை ரசிகர் மன்றம் சார்பாக படம் திரையிடப்பட்டிருக்கும் திரையறங்கம் எதிரே பிரமாண்டமாக கட் அவுட் வைத்து, அதற்கு ரசிகர்கள் பால் மற்றும் பீர் அபிஷேகம் செய்தார்கள்.
மேலும் பூ தூவி, பூசணிக்காய் மற்றும் 108 தேங்காய்களை உடைத்து கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டம் இன்று மட்டும் இல்லை ஒவ்வொரு திரையிலும் இந்த பொங்கலுக்கு கேட்கப் போவது உறுதியாகியுள்ளது. அந்த அளவு தனுஷ் நடிப்பில் அசுரத்தனத்தினை காட்டியுள்ளார்.
அந்த அளவுக்கு அதிரடி நிறைந்த சண்டை காட்சிகளை கொண்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதே ஆச்சர்யமான விஷயம் தான்.
சண்டை காட்சிகள் ஒரு புறமிருக்க வலி நிறைந்த ஒரு உணர்வுகளை சுமந்திருக்கின்றது.
ஏழை மக்களை அந்நியர்கள் கொடுமைப்படுத்திய சுதந்திர போராட்டக் கதையாக இந்த படம் உருவாகி உள்ள நிலையில், நிச்சயம் ஒட்டுமொத்த மக்களுக்கும் படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம்.