மீண்டும் இலங்கைக்கு உதவ முன்வரும் சீனா!

இலங்கை குறித்து தாம் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த தகவல் சீனத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சிரமத்திலிருந்து மீள, கடன் நிவாரணம் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைவதில் இலங்கையின் பதிலளிப்புக்கு ஆதரவளிப்பதில் தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குமாறு சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு தாம் அழைப்பு வெளியிட்டுள்ள சீன தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்திய பின்னர், சீன நிதி நிறுவனங்கள் சீனா தொடர்பான முதிர்ந்த கடன்களைக் கையாள சரியான வழியைக் கண்டறிவதற்கும், தற்போதைய சிரமங்களைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்கும் தங்கள் தயார்நிலையை வெளிப்படுத்தியுள்ளன.

சீனாவுடன் இலங்கை தீவிரமாக செயல்படும் என்று நம்பும் அதேவேளை, சாத்தியமான தீர்வை விரைவாக உருவாக்கும் என்று நம்புவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor