இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என அமெரிக்க தூதர் ஜூலி சாங் (Julie Chung) குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் சிறந்த கருவிகள், அணுகுமுறைகள் மற்றும் வளங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
Pleased to learn that Sri Lanka has reached a provisional agreement with the IMF. The IMF represents the best tools, approaches, and resources to enable Sri Lanka to overcome the ongoing economic crisis. The US stands ready to assist.
— Ambassador Julie Chung (@USAmbSL) September 1, 2022
அமெரிக்கா உதவ தயாராக உள்ளது எனவும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.