மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 123.3மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்வரும் மழை காரணமாக மட்டக்களப்பின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கீயுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் மழைபெய்யும் நிலைமை காணப்படுவதனால் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுவருகின்றனர்.