மின்சக்தி அமைச்சின் கூற்றினை நிராகரித்த PUCSL

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான எந்தவொரு யோசனையும் தமக்கு கிடைக்கவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத், முன்னதாக இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான பிரேரணை PUCSL க்கு கையளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் அவரது கருத்துக்களை நிராகரிக்கும் வகையிலேயே PUCSL இன் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

PUCSL ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, எதிர்வரும் பெப்ரவரிக்கு முன்னர் மின் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறியிருந்தார்.

எவ்வாறெனினும், மின் கட்டணத்தை குறைக்கும் கோரிக்கை தொடர்பான மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சரின் கூற்றுக்களை PUCSL மறுத்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள PUCSL இன் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத், CEBயிடமிருந்து அத்தகைய முன்மொழிவு எதையும் நிறுவனம் பெறவில்லை.

2024 ஜனவரி 08 ஆம் திகதி (நேற்று) வரையிலும் இவ்வாறானதொரு கோரிக்கையானது CEBயிடம் இருந்து விடுக்கப்படவில்லை என்றார்.

Recommended For You

About the Author: admin