இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைவர் Craig Ervine அதிகபட்சமாக 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதன்படி, 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே அதிகபட்சமாக 95 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் Richard Ngarava அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த வெற்றியை தொடர்ந்து 3 போட்டிகளை கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.