இலங்கையில் தங்க மாஃபியா

கொழும்பில் தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வற் வரிஅறவிடப்படுவதாக தேசிய தங்க நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது,

தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வற் தொகையை அரசாங்கத்திற்கு செலுத்துவார்களா? இல்லையா ?என்பது குறித்து தெளிவான முடிவை எடுப்பது கடினமாக இருக்கின்றது என தேசிய தங்க நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

சில கடை உரிமையாளர்கள் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கப் பொருட்களுக்கு 32 ஆயிரம் ரூபாய் வரை வற் வரி வசூலிக்கின்றனர்.

ஒரு சில தங்க நகை விற்பனையாளர்கள் 24,000 ரூபாய் அல்லது 12,000 ரூபாவாக அறவிடுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தெடர்பில் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் கருத்து தெரிவிக்கையில்,

எவ்வாறாயினும், சில விற்பனையாளர்கள், வற்வரி அறவிடாமல் தமது நகைகளை விற்பனை செய்வதாக அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கநகைகளை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விடயங்களையும் இதன்போது கேள்வி கேட்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுவாக நாம் தங்கத்தை வாங்கும் போது செய்கூலி, சேதாரம் என்பவற்றை கேட்டறிவது போல் தங்கத்தின் தரம் பற்றியும் கவனம் செலுத்துவோம் அதே போல் எப்போதும் செயற்படவேண்டும்.

மேலும், பழைய தங்கத்திற்கான விலையில் சேர்க்கப்படும் சதவீதம், சேவைக் கட்டணங்களின் சதவீதம், வற் மதிப்பின் சதவீதம் என்பவற்றையும் கேட்டறிவது அவசியம்.

விற்பனை விலை மற்றும் தங்கத்தின் விலை, வாங்கும் விலை ஒரு பவுன் அல்லது 1 கிராமாக இருந்தாலும் அது பற்றியும் சரியான தெளிவு மக்களுக்கு தேவைப்படுகின்றது.

மேலும், கையால் செய்யப்பட்ட நகைகள் அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட நகைகள் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும். அவற்றிலும் கூட ஒரே நிறை இருக்கும். ஆனால், விலைகளில் மாற்றம் ஏற்படும். ஆகவே, வாங்கும் போது வற்வரி விகிதத்துடன் விலையையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.

எனவே, நீங்கள் வாங்கிய அதே தங்கப் பொருளை மீண்டும் வேறு கடைக்காரிடம் காண்பித்து விலையைக் கேளுங்கள். மற்றும் பரிசோதித்து கொள்ளுங்கள்“ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin