தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெடுகளால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இந்த வெற்றியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய பழி தீர்த்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இடம்பெற்றிருந்தது. இந்தப போட்டில் வெறும் இரண்டே நாளில் முடிவுக்கு வந்துள்ளது.
நேற்றைய தினம் இந்தப் போட்டி ஆரம்பமாகியிருந்த நிலையில், இரு அணிகளும் முதல் இன்னிங்ஸை விளையாடியிருந்ததுடன், இரு அணிகளும் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தன.
முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ஓட்டங்களையும், இந்திய 177 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. நேற்றும் மட்டும் மொத்தமாக 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று தொடர்ந்தும் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா சகல விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களை பெற்றிருந்தது.
தென்னாப்பிரிக்கா சார்பில் ஐடன் மார்க்ராம் 106 ஓட்டங்களை பெற்றிருந்தார். அவரை தவிர டீன் எல்கர் 12 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டார்.
இந்திய அணி சார்பில் பும்ரா ஆறு விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்திய அணிக்கு 79 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து தனது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்று வெற்றயடைந்துள்ளது.