புதுவருட நிகழ்வுகளை முன்னிட்டு தலைநகர் பரிசில் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 6,000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
இன்று டிசம்பர் 29, வெள்ளிக்கிழமை இதனை உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்தார். 44 படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பரிஸ் முழுவதும் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
’பயங்கரவாத அச்சுறுத்தல்’ தீவிரமாக உள்ள நிலையில், மத வழிபாட்டுத்தலங்கள் சிறப்பு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் புதுவருட கொண்டாட்டத்தைக் காண 1.5 மில்லியன் மக்கள் ஒன்றுகூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. அங்கும் பல அடுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.