மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கும்

எதிர்காலத்தில் பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணவீக்கத்தை தாக்கம் மக்களிடையே பாரியளவில் இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

வரி விதிக்கப்படாத பல்வேறு வகையான பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதாலும், ஏற்கனவே வரி விதிக்கப்படும் பொருட்களின் மீதான வரிச்சுமை அதிகரிப்பதாலும் எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதன் விளைவுகளை மக்கள் ஏற்கனவே அனுபவித்து வருவதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

வெட் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் ஏற்கனவே பொருட்களை சேமித்து வைத்து பின்னர் விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரி விதிப்பின் மூலம் வர்த்தகர்கள் தேவையற்ற அனுகூலங்களைப் பெறுவதைத் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin