கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்

உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு நாட்டுக்குள் நுழைவதனை தடுப்பதற்கு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பாதுகாப்பு ஆய்வு நடவடிக்கைகளை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு குறித்து இலங்கையில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விடுக்கப்படாத நிலையில், சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவொன்று ஒன்றுகூடி உலக நிலைமைகளை கவனத்திகொண்டு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க வேண்டுமென சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸின் மாறுபாடு தொடர்பில் பொது மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சுவாசநோய் தற்போது அதிகளவில் பதிவாகி வரும் நிலையில், கர்ப்பிணித் தாய்மார்கள், நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin