உக்ரைனில் முதல் முறையாக கிறிஸ்மஸ் : ர‌ஷ்யாவின் நடைமுறைக்கு எதிர்ப்பு

ர‌ஷ்யா நடைமுறைப்படுத்திய வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் உக்ரைன் முதன்முறையாக டிசம்பர் 25ஆம் திகதியன்று கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடப்படவுள்ளது.

உக்ரைனில் ஜனவரி மாதம் 7 ஆம் திகதியே கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. ஆனால் இவ்வாண்டு டிசம்பர் 25ஆம் திகதியன்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

பொதுவாக கிறிஸ்துவர்கள் டிசம்பர் 25இல் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவர். இந்நிவையில் அன்றைய தினம் அப்பண்டிகையைக் கொண்டாட வகைசெய்யும் சட்டத்தைச் செயல்படுத்த உக்ரேனில் ஜூலை மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

“தங்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றி தங்களுக்கான விடுமுறை நாட்களை அனுசரித்து வாழ உக்ரேனியர்கள் விரும்புகின்றனர். ர‌ஷ்ய பாரம்பரிய முறைப்படி ஜனவரி 7 ஆம் திகதியன்று கிறிஸ்மஸ் கொண்டாடும் வழக்கத்தை உக்ரேனியர்கள் கைவிட புதிய சட்டம் வழிவகுக்கும்” என அந்நாட்டு ஜனாதிபதி வொலொடமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைனில் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள். அந்நாட்டில் அண்மைக் காலம் வரை சமயம் சார்ந்த நடைமுறைகளில் ர‌ஷ்யா அதிகம் தலையிட்டு வந்தது.

உக்ரைனில் ர‌ஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் தாக்கம் இருப்பதைக் காட்டும் அறிகுறிகளை அகற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின்கீழ் சாலைகள், அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டு வருவதும் அடங்கும்.

இந்நிலையில் உக்ரைனின் பாரம்பரிய தேவாலயமான ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஆஃப்மும் கிறிஸ்மஸ் பண்டிகை நாளை டிசம்பர் 25ஆம் திகதிக்கு மாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin