2005ஆம் ஆண்டிலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
அப்போது இது குறித்து பலரும் குழம்பினர்.
ஆனால் அன்று தீர்க்கதரிசனமாக புலிகள் தெரிவித்ததை இன்று ரணில் விக்கிரமசிங்க அவருடைய செயற்பாடுகளால் நிரூபித்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர்த்து ஏனைய தமிழ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து நல்லிணக்கம் தொடர்பாக பேசினார்.
பல மாதங்களுக்கு முன்னரே இது குறித்து பேசப்பட்டது.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்ற அடிப்படையிலேயே முதல் சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
ஆனால் தீர்வு வழங்கப்படவில்லை. நேற்றை சந்திப்பின்போது பாராளுமன்ற தேர்தலின் பின்னர் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணிலால் இந்த பேச்சுவார்ததை ஆரம்பிக்கபட்ட போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதுவொரு நாடகம் என தெளிவாக மக்களுக்கு எடுத்துக் கூறியிருந்தது.
இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நாடுகளிடம் கடன் கோரியுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிரான போர் காரணமாகவே சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கைக்கு பாரிய கடன் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, இனப்பிரச்சினைக்கு தீர்ப்பதற்கு திட்டம் வைத்திருப்பதாக சர்வதேச நாடுகளுக்கு எடுத்து காட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் நாடகம் நடத்தி வருகின்றார்.
ரணில் ஒருபோதும் இந்த பிரச்சனையை நேர்மையாக தீர்க்கமாட்டர். சிங்கள மக்களுக்கு உண்மையை கூறினால் இந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை வைக்கலாம்.
அதை செய்யாமல் வாருங்கள் பெப்ரவரி நான்காம் திகதி தீர்வை கொடுப்போம் என செல்வது எல்லாம் அப்பட்டமான பொய் கதைகள் ஆகும்.
நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை.
2005ஆம் ஆண்டிலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
அப்போது இது குறித்து பலரும் குழம்பினர்.
அன்று தெரிவித்த தீர்கதரிசனத்தை ஜனாதிபதி ரணில் தன்னுடைய செயற்பாடுகளால் நிரூபித்துள்ளார்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.