டெங்கு நோய் தொடர்பாக சகல நிறுவனத் தலைவர்கள் மற்றும் பொது மக்களுக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்கள் விடுக்கும் அவசர செய்தி, யாழ் மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
அண்மையில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதாரத் துறை தம்மாலான முழு வீச்சில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியமாக உள்ளது. கடந்த 3 நாட்களாக கொழும்பில் இருந்து வருகை தந்த பூச்சியியல் ஆய்வுக் குழுவினரால் பல நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு குடம்பிகள் இனங் காணப்பட்டுள்ளது.
இது எழுமாறாக செய்யப்பட்ட ஆய்வு. எனவே யாழ் மாவட்டம் முழுவதுமாக இது தான் நிலைமை என ஊகிக்க முடிகிறது.
எனவே சகல நிறுவன தலைவர்களுக்கும் 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உடனடியான துப்பரவு பணிகளை மேற்கொண்டு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை அகற்றுவதுடன் இத்துடன் இணைக்ப்பட்ட படிவத்தினை வாராந்தம் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நுளம்பு குடம்பிகள் இனங்காணப்படும் நிறுவனங்களிற்கு எதிராக தொற்று நோய் பரவ ஏதுவான சூழல் உள்ளதாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க சுகாதார வைத்திய அதிகாரிகளையும் பொலிசாரினையும் கோரியுள்ளேன்.
இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் மாகாண சுகாதார சேவைகள் பாளிப்பாளர் பணிமனையின் Hotline இலக்கமான 0761799901 இற்கு தொடர்பு கொள்ளலாம்