மைக்ரோவேவ் ஓவனை சமைப்பதற்கும் சூடு படுத்துவதற்கும் அதிகமாக பயன்படுத்துவது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அலுவலகத்தில் இருந்து களைத்து போய் வரும் போது குளிர் சாதன பெட்டியில் காலையில் வைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் பலருக்கு காணப்படுகின்றது.
ஒருமுறை சூடுபடுத்திய உணவை மீண்டும் சூடுபடுத்துவதே தவறு என்னும் நிலையில், அதனை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தி சாப்பிடுவதால், உடலுக்குப் பல்வேறு அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிகின்றனர்.
மைக்ரோவேவ் ஓவன்கள் எலக்ட்ரோமேக்னடிக் கதிரியக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிலையில் அதில் சமைக்கப்படும் உணவுகள் அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படுகின்றன.
வெளியாகும் நச்சு பொருள்
உணவுகளில் உள்ள சத்துக்கள் ஒழுங்கற்று பிரிவதால் அதில் “பைஸ்பினால்” என்ற நச்சுப்பொருள் உருவாகிறது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அதீத வெப்பமானது உணவில் உள்ள சத்துக்களை ஒழுங்கற்று பிரிக்கின்றது.
இதனால், உணவுகளின் முழு பலன்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன.
அத்தோடு உணவு வகைகளில் உள்ள சத்துக்கள் ஒழுங்கற்று பிரிவதால் அதில் பைஸ்பினால் என்ற நச்சுப்பொருள் உருவாகிறது. இது பல்வேறு வகை புற்றுநோய்களை ஏற்படுத்துவததாக கூறப்படுகிறது.
இந்த நச்சுப் பொருள் மார்பக புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் அதிகளவு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொள்ள வேண்டும். அப்போதுதான் நீர்ச்சத்து இழப்பிற்கு அது ஈடாக அமையும் என்று கூறப்படுகின்றது.