ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கு (Mohammed bin Salman Al Saud) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிவைத்த எழுத்துமூல கடிதமொன்றை நேற்று பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நட்பு நாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காகவும், அவற்றை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணிலின் விசேட தூதுவர், இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா (Mohammed bin Salman Al Saud) சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-குரைஜி (Waleed bin Abdulkarim Al-Khuraiji) இந்த கடிதத்தை பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.