முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான கீதநாத் காசிலிங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பணியகம் ஆகியவற்றுக்கு அண்மையில் இடம்பெற்ற கட்சி மறுசீரமைப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீதநாத் காசிலிங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதிநிதி என்பதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சமூகம் மத்தியில் கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்துவது குறித்து அவருக்கு பணிகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீதநாத் காசிலிங்கம், இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த போது வடக்கு மற்றும் கிழக்கில் புனர்வாழ்வு விவகாரங்களுக்கான பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டார்.
பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் குழுவிற்கு நியமிக்கப்பட்ட இளம் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.