திலீபனைக் கொண்டாடும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமாகாணத்துக்கு வாகனப் பேரணியை ஏற்பாடு செய்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் எம்.பி.யின் பதவியை பறிக்க தமது கட்சி தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரசார செயலாளர் அஞ்சன சந்திரசிறி தெரிவித்தார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் அவர் தாக்கல் செய்த முறைப்பாடு இன்று (21) கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த முறைப்பாடு குறித்து தகவல்களை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.
17.09.2023 அன்று அமிர்தலிங்கம் திலீபனைக் கொண்டாடும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமாகாணத்திற்கு வாகனப் பேரணியொன்றை நகர்த்துவதற்கு செல்வராஜா கஜேந்திரன் ஏற்பாடு செய்தார். அங்கு கலவரச் சூழல் ஏற்பட்டது.
இதன்படி திலீபன் என்ற புலி பயங்கரவாதியை கொண்டாடி பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்கு நேரடியாக ஆதரவளித்து அரசியலமைப்பின் 157 (ஏ) சரத்தை கடுமையாக மீறியதாக அமையும்.“ எனக் கூறியுள்ளார்.
கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி பிவித்துரு ஹெல உருமயவின் பிரசார செயலாளர் அஞ்சன சந்திரசிறி இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேலதிக இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.