துறைமுக பொது ஊழியர் சங்கம் எச்சரிக்கை

மூன்று வருடங்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வேலைத்திட்டத்தை அரசாங்கம் அறிவிக்காவிட்டால் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக துறைமுக பொது ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்தும், ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகான தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சம்பள உடன்படிக்கைகள் இம்மாதம் 31ஆம் திகதி முடிவடைவதால் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும்.

ஆனால், இதுவரையில் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்தை தயாரிக்க முடியவில்லை எனவும் அவர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் துறைமுக ஊழியர்களின் சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை. அதுதொடர்பான வேலைத்திட்டத்தை அடுத்த 7 நாட்களுக்குள் அறிவிக்குமாறும், இல்லையேல் 28ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Recommended For You

About the Author: admin