வாக்குப்பதிவின் போது மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு அம்சங்களை அங்கீகரிக்கும் வகையில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணைக்குழு இன்று (21) முதல் ஆரம்பித்துள்ளது.
தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை 10 மணிக்கு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பு மற்றும் பஃப்ரல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
டிசெம்பர் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.