வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் கண்டாவளை மாகாவித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, “வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியில் உள்ள மக்களின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய வீட்டுத்திட்டத்துடன் பாதுகாப்பான இடத்தில் காணிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்த பாதிப்பு குறைவடைந்த பின்னர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு செல்ல முடியும்” எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.