யாழ் பல்கலைக்கழகத்தினுள் அரைகுறை ஆடையுடன் சென்றவர்களால் சர்ச்சை!

யாழ் பல்கலைக்கழகத்தினுள் அரைகுறை ஆடையுடன் சென்றவர்கள் , அங்கிருந்த காவலிகளுடன் முரண்பட்ட சம்பவம் ஒன்று சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பல்கலைகழகங்களில் மரபு ரீதியான ஆடையுடன் மாணவர்கள், மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் அனைவரும் செல்லவேண்டும், அதுதான் கல்வியினை போதிக்கும் பல்கலைகழகத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும்.

தடுத்து நிறுத்திய காவலாளிகள்
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக நுழை வாயிலில் அரைக்காற்சட்டை போட்டபடி உள்ளே நுழைந்த ஒருவரை அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபருடன் சென்ற பெண்கள் காவலாளிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பிலான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

அதேவேளை யாழ் பல்கலைக்கழகம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிற்குள்ளும் இவ்வாறு காற்சட்டை அணிந்து செல்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor