ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வெற்றிகரமாக துபாயில் நடந்து முடிந்தது. 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் பத்து அணிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை வாங்க வேண்டும். இதில் எட்டு வீரர்கள் வெளிநாட்டு வீரர்களாக அதிகபட்சமாக இருக்க வேண்டும். இந்த நிலையில் இந்த மொத்த ஏலத்தில் 72 வீரர்கள் வாங்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் 30 வெளிநாட்டு வீரர்களை அணிகள் தேர்வு செய்து இருக்கிறது. இந்த மினி ஏலத்தில் மொத்தமாக 230 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. இதில் கொல்கத்தா ராஜஸ்தானை தவிர மற்ற அணிகள் அனைவரும் 25 வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். கொல்கத்தா 23 வீரர்களையும்,ராஜஸ்தான் 22 வீரர்களையும் தான் தேர்வு செய்திருக்கிறது.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கொல்கத்தா அணி 31 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறது. இரண்டாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 30 கோடியே 80 லட்சம் ரூபாயின் மூன்றாம் இடத்தில், சிஎஸ்கே அணி 30 கோடியே 40 லட்சம் ரூபாயும், குஜராத் அணி 30 கோடியே 30 லட்சம் செலவு செய்திருக்கிறது. மும்பை அணி 16 கோடி 70 லட்சம் ரூபாயும் ,டெல்லி அணி 19 கோடி 5 லட்சம் ரூபாயும், லக்னோ அணி 12 கோடி 20 லட்சம் ரூபாயும், பஞ்சாப் அணி 24 கோடியே 95 லட்சம் ரூபாயும் பெங்களூர் அணி 20 கோடியே 40 லட்சம் ரூபாயும் ராஜஸ்தான் 14 கோடியே 30 லட்சம் ரூபாயும் ஏலத்தில் செலவு செய்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக மிச்சல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறார். மூன்றாவது இடத்தில் பேரல் மிச்சல் 14 கோடி ரூபாயை சிஎஸ்கே கொடுத்திருக்கிறது. நான்காவது இடத்தில் பஞ்சாப் அணி ஹர்ஷல் பட்டேலை 11 கோடியே 75 லட்சம் கொடுத்தும் ஐந்தாவது இடத்தில் பெங்களூர் அணி அல்சாரி ஜோசப்பை 11 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.