தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தமையாலேயே தமிழர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஆயுதப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இருந்த நிலை இப்போது முற்றிலும் மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் வேற்று நாட்டவர்கள் போல் நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இப்போது வடக்கு, கிழக்கைப் பார்த்தால் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் இல்லாவிட்டாலும் ஏனைய விடயங்கள் எல்லாம் நடக்கின்றன.
தமிழர் பகுதியில், தமிழ் மக்களின் வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
எங்களிடம் ஆயுதங்கள் இருந்தபோதும், ஆயுதப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோதும் இருந்த நிலைமை இப்போது இல்லை.”
“எங்கள் சொந்த நிலத்தில் நாங்கள் வெளிநாட்டினராக பார்க்கப்படுவது போல் உள்ளது,” பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“பிரபாகரன்’ என்ற பெயரில் கேக் வாங்கிய செயல்களை கூட துன்புறுத்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கூட வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதை கண்டுகொள்ளவில்லை.
தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரித்து வருகின்றனர். விகாரைகளுக்காக காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
பயங்கரவாத தடைச் சட்ட தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது.”
விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இலங்கை அரசாங்கம் ஓரளவேனும் பயந்திருக்கும்.
ஆயுதப் போராட்டம் காரணமாக பாராளுமன்றத்தில் நாங்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டோம்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.