சிஎஸ்கே செய்த சொதப்பல்.. ஆப்பு வைத்த டெல்லி கேபிடல்ஸ்

ஜார்கண்ட் அணியின் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் குமார் குஷாக்ராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க முயற்சி செய்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அந்த முயற்சியை தடுத்தது.

தோனி தன் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் குஷாக்ராவை கவனித்து வருகிறார். அவர் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து சிஎஸ்கே அணி அவரை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அவர் பெரிய வீரர் இல்லை என்றாலும், சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே ட்ராபி ஒருநாள் போட்டித் தொடரில் 355 ரன்களை சேஸிங் செய்த போது ஆறாம் வரிசையில் இறங்கி 37 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இவரை இப்போதே அணியில் சேர்த்து பயிற்சி அளித்தால் ஐபிஎல் தொடரில் ஒன்று, இரண்டு போட்டிகளில் ஆட வைக்கலாம்.

அதே போல, 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் குமார் குஷாக்ரா பெயர் அறிவிக்கப்பட்ட உடன் முதல் அணியாக சிஎஸ்கே அணி விலை கேட்டது. ஆனால், உடனே குஜராத் டைட்டன்ஸ் அணி போட்டி போட்டது. அப்போது சிஎஸ்கே அணியிடம் 3.20 கோடி மட்டுமே கையிருப்பு இருந்தது. குமார் குஷாக்ராவின் அடிப்படை விலை 20 லட்சம் மட்டுமே. அதனால், எப்படியும் 1 கோடி வரை சென்றால் குஜாரத் அணியை விலை கேட்க விடாமல் செய்து அவரை வாங்கலாம் என கணக்கு போட்டது சிஎஸ்கே.

ஆனால், 1 கோடிக்கு மேல் டெல்லி கேபிடல்ஸ் அணி களத்தில் குதித்து அவருக்கு விலை கேட்டது. குஜராத் – டெல்லி போட்டி போடவே இறுதியில் 7.20 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை வாங்கியது. சிஎஸ்கே அணிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

Recommended For You

About the Author: admin