சனிபகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் 12 ராசிக்கு பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியினால் 2024ல் சங்கடங்களை அனுபவிக்க போகும் ராசிக்காரர்களை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தின் படி சனிபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயர் இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் அஷ்டம சனி, அர்த்த சனி, ஏழரை சனி போன்ற சனியின் பார்வைகள் அதிகரிக்கும். இதன் மூலம் சில ராசிகள் இக்கட்டான சூழ்நிலையில், சிக்கி தவிப்பார்கள். அந்த வகையில் சனியின் இந்த பெயர்ச்சியினால் மோசமான விளைவுகளை சந்திக்க கூடிய ராசியை பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 11ஆம் இடத்தில் ஆட்சி செய்கிறார். ஆகையால் எதிர் வரும் 2024 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு முடிவையும் திடமாக எடுக்க முடியாத சூழ்நிலை வரும். ஆகையால் முடிவுகளை எடுக்கும் போது பலமுறை யோசிப்பதும் நல்லது. ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். உடலில் இருந்து வியர்வை வெளியேறும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் கவனமாக கையாள்வது சிறந்தது.

விருச்சகம்

இந்த ராசிக்கு சனி பகவான் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ஆகையால் இவர்களுக்கும் வரும் ஆண்டில் இக்கட்டான சூழ்நிலையே நிலவுகிறது. உடல் உபாதைகள் அதிகரிக்கும். இதனால் உடல் நலம் மனநலம் இரண்டும் பாதிக்க கூடிய வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்யுங்கள் நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு தெளிவான சிந்தனையுடன் இருப்பது பிரச்சனைகளை சமூகமாக சமாளிக்க துணை புரியும். சோம்பேறித்தனத்தை தள்ளி வைப்பது முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும்.

கும்பம்

இந்த ராசி முதல் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கிறார் குறிப்பாக ஏழரை சனியின் சஞ்சாரம் இருப்பதால் 2024 ஆம் ஆண்டில் உடல் நல பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். செலவுகள் அதிகமாக அதிகரிக்கும். மே மாதத்திற்கு பிறகு குருவின் பார்வையால் ஓரளவிற்கு நிம்மதி அடையலாம். ஆனாலும் மன உளைச்சலை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எந்த முடிவுகளையும் யோசித்து நிதானமாக எடுப்பது நல்லது. சோம்பேறித்தனம் இல்லாமல் உடலில் இருந்து வேர்வை வரும் அளவிற்கு உழைப்பது நல்ல பலனை தரும்.

சனியின் பெயர்ச்சியால் பாதகத்தை அனுபவிக்கப் போகும் இந்த ராசிக்காரர்கள் இதனால் பெரிதாக அச்சப்பட தேவையில்லை. அவரவர் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப இதில் சில மாற்றங்களும் உண்டு. வரக் ரகூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் புத்திசாலித்தனமாக செயல்படுவது முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Recommended For You

About the Author: admin