ஐபிஎல் ஏலம் முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே துபாயில் நாளை (19ஆம் திகதி) நடைபெறவுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தை ஆண்களே நடத்தி வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக மல்லிகா சாகர் (Mallika Sagar) என்ற பெண் ஏலத்தை நடத்தவுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் Auctioneer எனப்படும் ஏலம் விடுபவர் முக்கிய பங்கு வகிப்பார். ஏலத்தை சுவாரசியமானதாக மாற்றும் திறமை இவருக்கு இருக்கும், அத்துடன் தனது வீரர்களின் விலையை ஏற்றி விடும் சாமர்த்தியமும் இந்த நபரிடம் காணப்படும்.
அந்த வகையில் மல்லிகா சாகர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மல்லிகா சாகர் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு Auctioneer ஆக செயல்பட்டிருக்கிறார்.
தன்படி புரோ-கபடி லீக் மற்றும் தொடக்க மகளிர் பிரீமியர் லீக் (WPL) ஆகியவற்றிற்கான ஏலதாரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.