ரஷ்யாவில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய விளாடீமிர் புடின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ளார்.
புடின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை.அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு வழங்கினாலும், அவா் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுவார் என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளாடீமிர் புடின் ரஷ்யாவை சுமாா் 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்.அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் தோ்தலில் 5 ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் தவணைகள் தொடர்பாக ஏற்கெனவே ரஷ்ய பாராளுமன்றம் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்தது. அந்த திருத்தத்தின் படி அவர் மேலும் 2 முறை ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட்டு, எதிர்வரும் 2036ஆம் ஆண்டு வரை ரஷ்ய ஜனாதிபதியாக பதவி முடியும்.
உக்ரைனுடனான போர் ரஷ்ய மக்கள் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கினாலும் துணை ராணுவப் படையான வாக்னா் குழுவினா் புடின் அரசுக்கு எதிரான ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்ட சூழ்நிலையிலும் புடினுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளதால் எதிர்வரும் தோ்தலில் அவா் வெற்றி பெறுவது உறுதி தெரிவிக்கப்படுகிறது.