தமது நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்” என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க-தென் கொரிய கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவிற்கு எதிராக வட கொரியா நடத்தும் எந்தவொரு அணுவாயுத தாக்குதலுக்கும் விரைவான, அபரிமிதமான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவுடனான மோதலின் போது திட்டமிடுவது குறித்த நுண்ணறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க-கொரிய குடியரசு அணுசக்தி ஆலோசனைக் குழு (NCG) வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் கூடியது.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அமெரிக்க-தென் கொரிய கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க நிலப்பரப்பில் உள்ள இலக்குகளை அடையக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா உருவாக்கி சோதனை செய்து வருகின்றது.
இந்நிலையிலேயே, குறித்த மூன்று நாடுகளும் வட கொரியாவிற்கு எதிராக செயற்பட்டு வருவதுடன், அவ்வப்போது இராணுவ ஒத்திகை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது