தீர்வு குறித்து பேச நேரமில்லை: இஸ்ரேல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு நாடுகள் தீர்வு குறித்து பேச இது நேரமில்லை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சார்க் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் மூன்று மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் காஸா மீது நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இதுவரை சுமார் 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பெண்களும்,சிறுவர்களுமே அதிகம் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையில் 60 ஆண்டுக்கும் மேலாக இருந்துபிரச்சினைக்கு தீர்வாக இரு நாடுகளை உருவாக்கும் தீர்மானத்தை எதிர்க்கும் இஸ்ரேல் அதிகாரிகள் வரிசையில் ஐசக் ஹெர்சார்க் இணைந்துள்ளார்.

இஸ்ரேல் இன்னும் அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இருந்து மீளவில்லை. மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.அவர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இப்படியான நிலைமையில் பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்கி கொடுப்பது தொடர்பாக பேச முடியாது என ஐசக் ஹெர்சார்க் கூறியுள்ளார்.

இஸ்ரேல் ஜனாதிபதி, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் நடந்த சந்திப்பிற்கு முன்னர் இதனை தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர் இரு நாடுகளை உருவாக்குவது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சார்க் இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் என்பதுடன் அந்தக் கட்சி இரு நாடுகளை உருவாக்கும் தீர்வை ஆதரித்து வருகிறது.

Recommended For You

About the Author: admin