புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கமே செய்யமுடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்படவேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மற்றும் செயற்பாட்டாளர்களை சென்று சந்தித்தனர்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அக்கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்தனர்.
மாவீரர் நினைவு தினத்தன்று மாவீரர் தினத்தை நடாத்துவதற்கு கொடி ஏற்றும் கம்பிகளை கொண்டுசென்ற வாகனத்தை பொலிஸார் கைப்பற்றிய நிலையில் அது தொடர்பில் அறிவதற்காக வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் அவரது மகன் ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அவர்களை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் நிலைமைகள் தொடர்பிலும் அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் சட்ட செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கடந்த மாதம் 27ஆம் திகதி எமது கட்சியை சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் அவரது மகனும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் இன்று அவர்களை சென்று பார்வையிட்டதோடு வழக்கு தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடினோம்.
அமைப்பாளருக்கு டயாபிடிக் நோய் இருப்பதினால் அவரது கால் வீங்கி காணப்படுகிறது அதற்காக நிஜமானிடம் இந்த விடயங்கள் பதிவு செய்யப்பட்டு இன்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலை பொறுப்பு அதிகாரி தெரிவித்து இருக்கின்றார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வைத்திருக்கின்றது எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஈடுபடுவதற்கு முழுமூச்சாக முயற்சிகளை அமைந்துள்ளது நாங்கள் அவருக்கு கூறியிருக்கின்றோம்.
இது ஒரு பெரிய சவால் இல்லை தமிழ் தேசியத்தில் ஊறி இருக்கக்கூடிய தமிழ் தேசியத்திற்காக எத்தனையோ தியாகங்களை செய்து கொண்டிருக்கின்ற நம்முடைய வடகிழக்கில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் கடைசி வரைக்கும் இடம் கொடுக்காது.
ஆனாலும், அப்படிப்பட்ட ஒரு முயற்சியை எடுப்பதற்கும் இப்படிப்பட்ட துரோக செயல்பாடுகளை செய்வதற்கு ஆட்கள் இருக்கின்றனர் அவர்களை இனம் கண்டு அவர்களோடு பயணிக்கின்ற அனைத்து தரப்புகளையும் இனம் கண்டு அவர்களை ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் அரங்கிலே நிறுத்தி ஓரம் கட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.