பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் டென்மார்க் தூதுவர் Freddy Svane ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் டென்மார்க் இடையிலான இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டென்மார்க் இலத்திரனியல் உற்பத்தி தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச நிதி வசதிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கிய பிரதமர், டென்மார்க் தூதுவர் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.