இலங்கையில் இருந்து விடைபெறும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் (Michael Appleton) நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதிப் பிரதமர் Winston Peters இன் மூத்த வெளிவிவகார ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.

Michael Appleton இலங்கையில் தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு அடுத்த மாதம் நியூசிலாந்து திரும்ப உள்ளார்.

”கொவிட்-19 தொற்றுநோய் இந்த நாட்டையும் உலகையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தபோது 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் எனது மனைவி நயன் மற்றும் மகன் சாம்ராஜ் ஆகியோருடன் நான் இலங்கைக்கு வந்தேன்.

மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கை வந்ததை போல் இப்போது உணர்கிறேன். ஏனென்றால், இரண்டரை ஆண்டுகளில் நியூசிலாந்து-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என Michael Appleton கூறியுள்ளார்.

இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது வதிவிட உயர்ஸ்தானிகராக சேவையாற்றியமை தனது இராஜதந்திர வாழ்வின் சிறப்பம்சமாகவும், அரசாங்க அதிகாரி என்ற வகையில் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவங்களில் ஒன்றாகவும் இருக்கும் எனவும் Michael Appleton தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin