ஐ.எம்.எப்.இன் கடன் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கைக்கான இரண்டாவது தவணை கடன் வசதியை சர்வதேச நாணய நிதியம் (IMF) பெற்றுக்கொடுத்திருப்பது திருப்தியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

தமது ‘X’ தளத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நடவடிக்கை இலங்கைக்கு ஒரு முக்கியமான படியாகும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல நிலையான சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பட்ட நிர்வாகத்துக்காக வழிகாட்டலாகவும் அமைந்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான இலங்கையின் பாதைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.” என்றும் தூதுவர் ஜுலி சங் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் தவணை கொடுப்பனவாக இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin