பிராத்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமா? முகமது ஷமி காட்டம்!

உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனை கொண்டாடும் விதமாக முகமது சமி தரையில் அமர்ந்து கால்களை நீட்டி பிரார்த்தனை செய்ய சென்றதாகவும், ஆனால் பின்னர் அதனை சுதாரித்து கொண்டு அதிலிருந்து பின் வாங்கியதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் சிலரின் இந்த பேச்சுக்கு முகமது ஷமி பதிலளித்துள்ளார். அதில், “நான் பிராத்தனை செய்ய வேண்டும் என்று நினைத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது, நான் யாருடைய பிரார்த்தனையையும் தடுக்க மாட்டேன், அதுபோல நான் பிராத்தனை செய்ய விரும்பினால் நான் செய்வேன்.

நான் இஸ்லாமியன் என்பதை பெருமையுடன் கூறுவேன், இந்தியன் என்பதையும் பெருமையுடன் கூறுவேன், இதில் என்ன பிரச்சனை உள்ளது. நான் பிராத்தனை செய்ய யாரிடமாவது அனுமதி கேட்க வேண்டும் என்றால் நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்” என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளக்கம் அளித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin