உக்ரைன் தலைநகர் Kyiv மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Kyiv மீது ரஷ்யா இந்த வாரம் இரண்டு சந்தர்ப்பங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, Kyiv மீதான ரஷ்யாவின் இரண்டாவது தாக்குதலில் குறைந்தபட்சம் 45 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் சம்பவ இடத்திலே சிகிச்சை பெற்றதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவர் வைத்தியசாலை மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.