ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியில் இடம்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி விடுவிப்புக்கான ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு விடுவிப்புக்கான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த காணியினை ஒருசிலர் போலி பத்திரங்களை தயார் செய்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் குறித்த பகுதியில் தற்காலிக விற்பனை நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அமைச்சரின் நேரடி தலையீட்டினால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையமும் அகற்றப்பட்டதுடன், சட்டப்பூர்வ ரீதியில் காணியினை பாடசாலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.